பாமுகம்
தமிழ் வாழத் தமிழோடு புலம் பெயர் தமிழரும் வாழத்
திடமோடு
தளமெடுத்து ஒலிஒளி அலை வீசிடும் பாமுகமே
உந்தன் வரவின் நோக்கும் போக்கும் வளர்வும் பூப்பும் பெரிதே
பிணங்கா நெறியும்
நிமிர்வுக்கான நகர்வுக்கான பொறியே
நீ வீசிடும்
பல்சுவைப் பயனுறு நிகழ்வுகள்
நாளாந்தத் தரவு வீச்சுக்களே
தந்தனவே உந்தன் முகத்துக்கு வசீகரம்
அதனால் தள்ளிட முடியா அனுபவச் சேகரிப்பை
அள்ளினோம் நாமும்
அகப்பட்டு
உந்தன் ஆளுமைக்குள்
சிறைப்பட்டு உன் செந்தமிழ் பந்தளுள்
வெள்ளி விழாக் காணு பாமுகமே
அள்ளியள்ளித் தருகிறோம்
அமுதத் தமிழாலே வாழ்த்துக்களை
அடங்காது தமிழ் திறமோடு மேம்பாடுகளைக் கடத்தி
ஏறுமுகமே காட்ட
பாமுகப் பொலிவுக்காய் பயணிக்கும்
பாமுகத் தலைவர், தொகுப்பாளர், ஏனைய நிகழ்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்