வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 193
தலைப்பு — தகைமை உடையோரை தேடிவரும் புகழ்
மண்ணில் முளைத்த மரங்களை வீழ்த்திடும்
மண்கல்லால் கட்டிய மாளிகையை வீழ்த்திடும்
கண்டிடலாம் புயலின் கொடிய கொடுமைகளை
ஒன்றுக்கும் அஞ்சாது ஓங்கிநிற்பது மலையாரே.
வீசும்புகழ் புயலால் வீழ்ந்திடுவர் பலர்
காசுக்கும் புகழுக்கும் காத்திருப்பர் பலர்
பூசும் புகழ் பேசும் பலவற்றை
மாசாய் புகழை மதிப்பர் அறிவுடையோர்.
புகழுக்காய் பணத்தை பகிர்ந்திடுவோர் பலருளர்
புகழுக்காய் பாவங்கள் புரிந்திடுவோர் பலருளர்
தகைமை உடையோரை தேடிவரும் புகழென்ற
தகவலிதைத் தெரிந்து தயவோடு நடந்திடுவீர்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
27/09/2022