சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 183

தலைப்பு — இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.

விருந்துக்கு வருவோரை வரவேற்கும் வழிமுறைகள்
பொருத்தமாய் பலவிருப்பினும் பயனுள்ள ஒன்றாக
பெருமை பெற்றிட பலரையும் கவர்ந்திட
பொறுமையுடன் இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.

திருமந்திரம் மூலமாய் திருமூலர் கூறுவதும்
வருந்தும் மனிதர்க்கு வழங்கக் கூடியதும்
பெருமை பெற்ற பெரியோர்கள் பகர்வதும்
விருப்போடு இன்சொல்லை வழங்கிடுவீர் என்பதையே.

பழமான இன்சொல்லைப் பாவித்தல் சிறந்ததென
நலமாக நமக்குரைத்தார் நம்வள்ளுவப் பெருந்தகையார்
வளமாக வாழ்வதற்கு வழிகாட்டும் இன்சொல்லை
பலருக்கும் வழங்கி பெருமை பெற்றிடுவீர்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/07/2022