அனைவருக்கும் வணக்கம் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 182
தலைப்பு — இப்படித்தான் வாழவேண்டும் என்றிடும் அறவழிகள்.
விண்ணோடும் மேகங்கள் வான்வெளியில் போகையால்
மண்ணிற்கு ஒளியூட்டும் முழுநிலவை மறைப்பதுபோல்
நன்மைகள் செய்பவரை நட்டங்கள் தடுத்து
துன்பங்கள் துயரங்களைத் தோற்றுவித்து வருத்தும்.
மோசடிகள் ஊழல்கள் மாசுக்களால் உலாவர
பாசம் நேசம் பணத்தால் மறைந்திடும்
தேசத்தில் சோகமும் துயரமும் சூழ்ந்திட
நாசங்கள் நன்றே நடைபோடும் நலமாக.
எப்படியும் வாழலாம் என்றிடும் எண்ணங்கள்
தப்புக்கள் தவறுகளைத் தருவித்து வருத்தும்
இப்படித்தான் வாழவேண்டும் என்றிடும் அறவழிகள்
எப்போதும் நல்லவற்றை எல்லோற்கும் வழங்கும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
18/07/2022