வியாழன் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 96

தலைப்பு — தைமகளே

தலைமகளே தைமகளே தரணியாள வருக
தலை நிமிர்ந்து நாம்வாழ வருக
தலைவன் சொல்லும் பாதையிலே வருக
தலைமைகளை சரி படுத்த வருக

தை வந்தாள் வழி பிறக்குமா
பேதைகள் வாழ்வில் வலி நீங்குமா
கோதைகளாய் வாழ்ந்த மனங்கள் மாறுமா
மேதைகளாய் இவர்கள் வாழ்வை மாற்றுவாயா

ஆறுதல் வார்த்தை சொல்ல வருவாயா
தேறுதல் பலம் சேர்த்து தருவாயா
மாறுதல் மலர மனங்களை மாற்றுவாயா
கூறுகிறேன் நடந்தவற்றை தைமகளே காப்பாற்றுவாயா?!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/01/2023