அனைவருக்கும் வணக்கம் 🙏
வியாழன் கவி — 91
தலைப்பு — உறவை பேணுவீர்
உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி
நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை
விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது
வளமாக வாழ்விக்கும் அன்பை பேணுவீர் !
பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல
அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள்
என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி
மண்ணில் உறவை பாசத்தை வளர்த்திடுவீர்!
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/06/2022