வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 179
தலைப்பு — எல்லாம் தெரியுமென்ற இறுமாப்பு
ஆசை அலைகளால் அள்ளுண்டு அலைந்து
கூசாது இரக்கமற்ற கொடுமைகள் புரிந்து
காசைச் சேர்த்து கௌரவம் பெற்றாலும்
ஓசையில் இழுக்கே ஓங்கி ஒலித்திடும்.
அடுத்தவரை மதித்து அன்பைப் பதித்திட
எடுத்திடும் அனைத்தும் இனிமை அளித்திடும்
கொடுத்தலும் இரக்கம் காட்டலும் இணைந்து
கொடுத்திடும் நிலைத்த கீர்த்தியை ஒருவர்க்கு.
எல்லாம் தெரியுமென்ற இறுமாப்புத் தந்திடும்
தொல்லைகள் கவலைகள் துயர்களைத் தொடராய்
நல்லவராய் அமைதியாய் நட்புடன் நடப்பின்
எல்லாம் தெரியவரும் ஏற்றம் கூடவரும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/05/2022