சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 175

தலைப்பு — தீயில் எரியும் எம் தீவு

தீயவற்றால் தீயவை தீயாகத் தீண்டுகையில்
சாதியால் சமயத்தால் சமமாகி சாத்துவிகமாய்
வீதிக்கு வந்தோர் வாழ்வதற்கு போராடுகிறார்
பாதிப்புற்றோர் பயமின்றித் துயரகற்றத் துடிக்கின்றார்.

பொறுப்பற்றுப் பொருளீட்டும் பேராசைக்காரர் செயல்கண்டு
வெறுப்புற்ற பெரும்பாலோர் விரக்தியில் வாடுகின்றார்
நெருக்கத்தால் துடிக்கும் நலிவுற்றோர் வாழ்வு
இருளால் மூடுண்டு இன்னலில் மூழ்கிறது.

திருட்டால் மோசடியால் சுருட்டிய ஊர்ச்சொத்து
வெறுக்கும் தீயின் வாயில் வீழ்ந்திடலாம்
பொறுப்புடன் நேர்மையாய் பொதுச்சசொத்தை நிர்வகித்தால்
மறுப்பில்லை மதிப்போடு மாமனிதனாய் மிளிர்ந்திடலாம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
17/05/2022