வியாழன் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி — 87

தலைப்பு — பேசும் மொழி

வாசல்வந்த காற்று பேசியது தென்றலாய்
வசந்தகால பூக்கள் பேசியது வாசமாய்
வஞ்சியவள் நானம் பேசியது மெளனமாய்
வண்ண பூக்கள் பேசியது பட்டாம்பூச்சியிடம்.

இருகண்கள் பேசியது காதல் மொழியில்
இதயம் பேசியது அமைதி மொழியில்
இனங்கள் பேசியது பல மொழியில்
இயலாமை பேசியது சைகை மொழியில்.

பல நூறு மொழி இருந்தும்
பல வழி மொழி இருந்தும்
பலர் பேசும் மொழி புரியவில்லை- ஆனால்
இதயம் பேசும்மொழி புரிந்தது இறைவனுக்கே.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
05/05/2022