வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 172
தலைப்பு — நோயாளிகளாய் மாற்றின இயந்திரங்கள்.
உரலும் உலக்கையும் உதவிக்கு அம்மியும்
தரமான உணவை தயாரிக்க உதவியதொடு
உரமான நோயற்ற உடலோடு அன்றிருந்தோர்
கரங்கள் உழைத்தைக் கண்டோம் கேட்டோம்.
வேட்டியும் சேலையும் பாவாடை தாவணியும்
காட்டின அன்று கலாச்சார ஆடைகளை
நாட்டினர் நம்முன்னோர் நாகரிகத்தை நலமே
வீட்டிலும் நாட்டிலும் விதைத்தனர் அமைதியை.
விடையாக்கி உழைப்பை வயப்படுத்திய இயந்திரங்கள்
நடைமுறையில் நம்மவரை நோயாளிகளாய் மாற்றின
உடையில் மாற்றம் உணவுமுறையில் மாற்றம்
தடையின்றி நாகரிகம் தளர்வாக்கியது பண்பாட்டை.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/04/2022