அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவி — 86
தலைப்பு — சித்திரையே
சித்திரையே முட்டாள்நாளை முதல்நாள் ஆக்கியவளே
முத்திரை மாதமாய் மலர்கிறாய் சிங்காரியே
யாத்திரை செய்ய சிறப்பாய் உகந்தவளே
மாத்திரை தேவையில்லை மந்திரத்தால் மகிழ்வானவளே.
முட்டாளாய் இருப்பவர்களையும் உன்னதமாய் உணர்த்தியவளே
கட்டளைகளை மதியாதவர் வாழும் பூமியில்
திட்டங்களை மட்டும் நியாயப்படுத்தும் மனிதர்களையும்
உடன்பிறந்தோர் நாளையும் அடக்கிய சித்திரையே
விதியால் வந்தோரும் தெருவில் உள்ளோர்
மதியால் வந்தவரும் தெருவில்தான் வாழ்கின்றனர்
சதியால் வந்தோரும் சேர்வதும் தெருவீதியிலே
அதனால் தெருவதிட மக்களையும் உன்னில் அடக்கினாயோ.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
20/04/2022