சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 171

தலைப்பு — எதிர்ப்பு அலை

பாதிப்பால் பலமிழந்த பலரும் பகர்ந்தும்
தோதற்று பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதால்
வீதிக்கு பாதிப்புற்றோர் விரைந்தனர் போராடி
நீதியை நிலைநாட்டி நிம்மதியை ஈட்டுதற்கு.

அதிர்ச்சிதரு சம்பவங்கள் அச்சத்தைச் சமைத்திட
நதியாய் நிம்மதி துயர்கடலுள் நுழைந்திட
உதித்திடும் எதிர்ப்பால் அமைதிக்கரை கண்டிட
பதிலாகும் பாதிப்பு புதினமாய் பாரெங்கும்.

கலகம் பிறந்தால் கரைவரும் உண்மை
விலகி இருப்பதால் விடிவு கிடைக்காது
உலகில் எதிர்ப்பலையால் உதித்தன உயர்வுகள்
களங்கமற்ற நீதியே கவலையை நீக்கிடும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
17/04/2022