வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 169
தலைப்பு — தெரிவானது பட்டினி
நலமுடன் பணப் பலமுடன் இருக்கையில்
பலரும் வந்தனர் பாசங் காட்டினர்
கலந்தனர் பகிர்ந்தனர் களிப்பில் கவலையில்
சகலரும் பிரிந்தனர் சஞ்சலம் நெரிக்கையில்.
பெட்டியில் பணமில்லை பானையில் சோறில்லை
எட்டிப் பார்க்கவும். எவரும் வரவில்லை
பட்டமர நிலைக்கு பாதிப்பு வாட்டிட
விரட்டுது பட்டினி வேதனை வடிவுடன்.
நெறிமுறை தவறாது நேர்வழி நடந்தும்
குறிக்கோள் இல்லாது காலம் கடந்ததால்
பறிபோனது பணத்துடன் பலமும் சேர்ந்தது
தெரிவானது பட்டினி தொல்லைதர இன்று.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/04/2022