சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 204

தலைப்பு – கண்ணியமாய் வாழ்வோர் உச்சத்தை எட்டுவர்.

பெயரைப் புகழை பெற்றிடப் புகுந்து
துயரை அழைத்து துன்பப் படாது
சுயமே சிந்தித்துச் சினேகமாய் வாழ்ந்தால்
நியமித்த புகழும் நிம்மதியும் சேர்ந்திடும்.

அடுத்தவன் எப்படி உழைத்தான் என்பதறியாது
தொடுத்திடும் பணவாசை தொல்லையில் முடியலாம்
இடுக்காய் பணமே இணைவதை அறிவீர்
எடுப்பீர் நற்பணி உழைப்பீர் அறவழியில்.

பட்டம் பதவி பணத்துடன் மதிப்பை
எட்டிட எண்ணி மாட்டுவர் துன்பத்தில்
கட்டுடன் நடந்து கண்ணியமாய் வாழ்வோர்
எட்டுவர் வாழ்வின் உச்சத்தை அமைதியாய்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/12/2022