அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 94
தலைப்பு – ஆசையால் அவதி
ஆசையால் அவதிப்பட்டு அநியாய வயதிலே
ஆடம்பரமாய் வாழ்வதற்கு அவமதிப்பை வெகுமதியாக்கி
அல்லும் பகலும் அவதியாய் அலைந்து
அவனியில் இருக்கிறோம் அவசர உலகிலே.
அன்பை விதைக்காமல் ஆவேச வார்த்தைகளால்
அவலங்களை அமைதியாய் கடக்க நினைத்து
அடைகிறோம் அல்லல்லுறும் வாழ்க்கையை
அகிலமெல்லாம்
அடைந்த செல்வம் காப்பாற்றவில்லை ஆயுளை.
அன்பாய் வாழ்ந்து அழகாய் உடுத்து
அமைதியாய் அகிலத்தில் அறநெறியில் நடந்து
அகத்திலும் புறத்திலும் ஆண்டவனை இருத்தி
அகிலம் போற்ற அறவழியில் வாழ்க.
நன்றி வணக்கம் 🙏
திருமதி . பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
01/12/2022