வணக்கம் Master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 269
தலைப்பு – பாமுகமே வாழீ
மூவொன்பது ஆண்டுகள் முத்தமிழை வளர்த்து
தலைமுறை வளர்ச்சியை பாமுகத்தில் உயர்த்தி
தன்னலமற்ற சிந்தனையும் தனித்துவத்தின் ஆளுமையும்
நிறைந்த காற்றலை நிரந்தர உயர்வளை.
பொரியோர் சிறியோர் பொதுவான அறிவியல்
இணையத்தில் உரையாடல் இசைவான பொழுதுபோக்கு
அத்தனையும் சிறப்பு அவணியிலே புதுப்பிறப்பு
வாழ்க பல்லாண்டு தமிழோடும் தலைமுறையோடும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி.பத்மலோஜினி. திரு
London
07/06/2024