வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 202
தலைப்பு – நினைவு நாள்
பிறப்பைப் பின்தொடரும் இறப்பு ஒருநாள்
உறவுகளைப் பிரித்து உயிரை எடுத்திடும்
இறப்பின் பின்பும் உலாவிடும் அவரவர்
தரவுகள் ஊரிலும் தரணியிலும் நற்பெயருடன்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அண்ணல் காந்தியவர்
ஓங்கிய சுதந்திரத்தை அகிம்சைவழி பெற்றார்
ஏங்கிய வாட்டமுற்ற ஏழைகளின் துயர்களை
தாங்கினார் அன்னை திரேசா அமைதியுடன்.
நாட்டுப்பற்றுடன் நல்லவற்றை நிறைவுடன் நாட்டியோர்
காட்டிய தியாகங்களை கருணையை மக்கள்
ஏட்டில் எழுதுவர் என்றும் போற்றுவர்
நீட்டுவர் புகழ்க்கரத்தை நினைவுதின நன்னாளில்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/11/2022