சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

தலைப்பு — மனங்களில் வாழலாம்

போராட்ட வாழ்க்கை பாரினில் வாழ்வானது
பாராட்டுக்கு பணக்கட்டுகள் போதாது போராடுது
பேராசை பொலிந்து கூட்டுது பெருஞ்சினத்தை
பாராவசமாய் ஏறுது பலரது தலைகளில்

பொறாமையால் மனங்களில் வஞ்சகம் வளர்க்காது
இறவாமையை இசைந்து இணைந்து ஏற்று
உறவுகளை உள்ளத்தால் உண்மையாய் உணர்ந்தால்
குன்றாத அன்போடு மனங்களில் வாழலாம்.

புத்தியுடன் வாழந்து பகுத்தறிவை வளர்த்தால்
சத்தியத்தை நிறுத்தி சந்ததியை உயர்த்தினால்
பக்தியுடன் பரம்மனை பரவசமாய் வழிபட்டால்
உத்தமர்களாய் இறுதிவரை மனங்களில் குடியிருக்கலாம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London