சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 232

தலைப்பு – விடுமுறை களிப்பு

விடுமுறை களிப்பு விடயங்களை அறிந்திட
உல்லாச விடுதியில் உற்சாகங்கள் நிறைந்திட
உணவுகள் எல்லாம் உயர்தரத்தில் அருந்திட
அளவற்ற செலவுகள் அன்பாய் விரையமாகின.

எத்தனை அழகு அத்தனையும் அகத்தினிலே
எப்படி சொன்னாலும் எட்டுத்திசையும் அழகே
பக்கமுள்ள ஸ்பெயின் பக்குவமான மனிதரகள்
மொழியில் அளவற்றபண்பு வேற்றுமொழி தவிர்ப்பு
அழகான அன்பான மனிதர்களின் சந்திப்பு.

எத்தனை ஆண்டானாலும் பளிச்சிடும் கட்டுமானம்
கால்பந்து மைதானமும் கரைபுரண்ட மக்களும்
அந்தப்புர மாளிகையும் இளைப்பாற பூங்காக்களும்
பழமையை பேணுகிறார்கள் பாரம்பரியத்தை பாதுகாக்கிறார்கள்
இறைவழிபாடு செய்கிறார்கள் இறைவனை மதிக்கிறார்கள்.

கோடை விடுமுறையும் கொண்டாட்டமும் நிறைவுகான
கோலங்களாய் நினைவுகள் மனதை நிறைக்க
கோடிட்ட பாதையில் விமானங்கள் பறக்க
கோடை விடுமுறைக்களிப்பை கவியாய் நான்வடிக்க.

நன்றி

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/09/2023