வியாழன் கவிதை

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி – 93

தலைப்பு – சோதனைகள் ஓழியட்டும்

வட்ட மலர்கள் வண்ணமாய் இருக்குது
கிட்டப் போக துடிக்குது கால்கள்
தொட்டுப் பார்க்க ஏங்குது விரல்கள்
பட்டமாய் பறக்குது காற்றினால் இதழ்கள்

காலையில் உதிர்த்தது மாலையில் வாடுது
சோலையில் மலர்ந்தது பாதையில் விழுகுது
வேலைச் சுமை மனதை வாட்டுது
பாலை வனத் தென்றலாய் போகுது.

எத்தனை வண்ணம் வானில் தெரியுது
அத்தனையும் நிறைவாய் மனதில் நிலைக்குது
சாதனைகள் பலதையும் வானவில்லாய் பரவ
சோதனைகள் சோர்வற்று சொல்லின்றி ஒழியட்டும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
17/11/2022