சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 214

தலைப்பு – தீ

அரிசியோ அடுப்பினிலே அரசியலோ அதிகாரத்திலே
எண்ணிக்கைக்கு வாக்குறுதி எண்ணிலடங்கா அவலங்கள்
அத்தனையும் தீயாய் அவனியிலே வலம்வருகுது
அனைக்க யாருமில்லை ஆர்பாட்டங்கள் நாடெங்கும்.

இயற்கையை சீண்டியதால் இலவசமாக சுனாமி
மிருகங்களை விரட்டியதால் மிடுக்கான காட்டுத்தீ
பள்ளங்கள் தோன்றியதால் பலமான நிலநடுக்கம்
அனுவாயுதப் போட்டியால் அனுவெல்லாம் புற்றுநோய்.

நீலாம்பரியானால் அக்னிதேவி நீண்ட நாட்களாய்
அமேஷன் எரியுது அந்தாட்டிக்கா உருகுது
ஆயுள் நீடிக்கவில்லை ஆசைகளும் அடங்கவில்லை
தீயினால் வாழ்வுமுடியுமோ? தீயதும் சேர்ந்தெரியுமோ?

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/03/2023