வியாழன் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி -99

தலைப்பு – நிமிர்வின் சுவடுகள்

காலங்கள் ஓடும் கவலைகள் தீராது
கதைகள் பல கேட்டும் சீராகாது
கணத்த இதயங்களின் தலையணை ஈரமாகுது
தென்றல் வீசினாலும் தேய்கின்ற நிலவானது.

தளர்ந்தது நடை தடுமாறுது கால்கள்
நடுங்குது கைகள் நடனங்களாய் வார்த்தைகள்
மனங்கள் மாறியும் மாற்றங்கள் வரவில்லை
அறிவியல் இருந்தும் ஆகாரம் ஆசையாகவில்லை.

வாடுகிறோம் நாளாந்தம் வாட்டங்கள் வட்டமானது
சாதனைகள் சுவைக்கவில்லை காவோலை கதையானது
சுவடுகள் மிஞ்சுமா சோதனைதான் மிச்சமா
சிந்தித்தாயா மானிடா நிமிர்வின் சுவடுகளை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
02/03/2023