வியாழன் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி – 98

தலைப்பு – கௌரியின் கவிதை

கண்கள் பேசிய காலம் போனது
காதுகள் கேட்ட காலம் போனது
கிடைக்காது என்ற போராட்டம் வீனாகாது
கீரையாய் போனது பலரது வாழ்க்கை.

குரங்கின் வழித்தோன்றல் கிரகங்களை தேடுது
கூவும் குயில்கலெல்லாம் இணையங்களில் உலாவுது
கெட்டவன் என்பதெல்லாம் மாறிப்போகுது இன்று
கேட்டு நடக்கும் குழந்தையில்லை இன்று

கைகள் இணைந்தால் காலத்தை வெல்லலாம்
கொண்டாட்டங்களில் கவலைகளை மறந்து உறவுகளினையட்டும்
கோடைகாலத்தில் வலம்வருவோம் அழகிய பூமியை
கௌரியின் கவிதை கவிதை தானா?

(கௌரி என்பது என்னுடய இன்னொரு பெயர். வரி அழகுக்காய் செய்துள்ளேன். )

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
22/02/2023