வியாழன் கவிதை

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி -97

தலைப்பு – உமையவளே வருவாள்

பல்லவி சொல்லும் பாட்டின் எடுப்பை
நல்வழி காட்டும் கவியின் கருத்து
கல்வியின் சிறப்பை கற்றவன் அறிவான்
சொல்வழி கேட்டு சிந்திக்க தொடங்கு.

என்னாளும் குறையாத மானிட மாற்றங்கள்
சொன்னாலும் புரியாத குழந்தையின் விளையாட்டு
இன்னாளும் உலுக்குது உக்ரைன் போராட்டம்
இன்னலை கொடுக்குது அதிகார நாடுகள்

எத்தனை பேர் வழிகாட்டியும் வழியில்லை
இத்தனையும் தெரிந்து மாறாத மனிதர்களே
பித்தனாய் போகும் இணையத்தின் அடிமைகளே
உந்தனை காப்பாற்ற உமையவளே வருவாள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/02/2023