சந்தம் சிந்தும் கவிதை

திருமதி திரேஸ் மரியதாஸ்

கௌசல்யா நினைவு
🌺பிரிவென்பது உறவின் துண்டிப்பு🌺😢
உடலோடு உயிரோடு
உலகத்தில் உலாவரும்போது
உள்ளங்களில் விரிசல்களை
உருவெடுக்கவைத்து
விரசல்களாக்காது
உயிரையெடுத்து
உணர்வையுடைப்பதாகும்

இருக்கும்போது
வார்த்தைக்குவார்த்தை இறக்கவைத்து
இறந்தபின்பு மறக்கவில்லை
வெறுக்கவில்லை
நித்தமும் நினைக்கிறோமென
நீண்டகல்வெட்டை வைத்து
பூபாள இராகமிசைப்பது
பூவுலகின்
அத்தியாயங்களாய்ப்
போச்சுதே

வாழும்போது வாள்கொண்டு வெட்டி
வாட்டிவதைக்காது உணர்வுகளை
உறையவைத்து உவகையடையாது
குறுநகையையாவது கொடுப்போம்
மறுபடி பிரசவமில்லையென்று
மனதால் உணர்ந்து

மரணத்தையே ஒழுங்காக
ஒழுங்குசெய்து திறப்பையும்
துறப்புக்குமுன் கொடுத்துக்
கொள்ளிவைக்கவும்
ஆளைத்தெரிந்து
வாழ்ந்த நீ வள்ளல்
கௌசல்யா நீ நெஞ்சுரமுள்ள
வீரப்பெண்தான்
வீழவில்லையம்மா வாழ்கிறாய்
மனங்களில் வாழ்க