சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மொழி*
வாய்மொழி நின்றே வழிவழி ஆகி
வனப்புகள் கண்ட வண்டமிழே
தாய்மொழி எனவே தவமெனப் பெறவே
தரணியில் உதித்த தமிழணங்கே
பாய்ந்திடும் இன்ப பாட்டிசை ஒலியில்
பனித்திடும் இன்ப பைந்தமிழே
நோய் எனத் தவித்தால்
நொடியில் வந்தே
நேயம் காட்டும் நிறைமொழியே
தாயவள் மடியில் தாலாட் ஒலியில்
தங்கும் இன்ப தமிழமுதே
தூயவளாகி துலங்கி நின்றே
துளிர்த்தே தளிர்ப்பாய்
தீந்தமிழே