****கலைவாணி****
தங்கக் கைகளில் தாங்கும் வீணையில்
அங்கையற் கன்னியின் அருளின் நாதம்
பங்கயம் உறைகின்ற பிரம்மனின்தேவி
திங்களாய் ஒளிர்கின்ற தீந்தமிழ்ச் சக்தி
பல்லின பாக்களும் பூக்களும் தொடுக்க
சொல்லில் இனிக்கும் சுந்தர வல்லி
வல்லமை ஞானம் வளர்க்கும் சக்தி
நல்வித்தை நல்கிடும் நாமகள் நாயகி
பவளமல்லி பூமாலை பார்வதிக்கு சாத்தி
நவமணியாய் நற்றீபம் நாற்றிசையும் ஏற்றி
உவப்பாய் தீன்பண்டம் உவந்தளித்துப்
போற்ற
நவராத்திரி நாளில் நலமருள்வாள் சக்தி .