*****ஆடிப்பட்டம் தேடிவிதை*****
காலம் கனிந்திருக்கு கண்மணிகாள் வாருங்கடி
கூலம் விதைத்திடலாம் கூடி குலவுங்கடி
ஞாலம் விரிந்திருக்கு நல்மணியை நாட்டுங்கடி
வேலன் துணையிருப்பான் விரும்பி விதையுங்கடி
ஓலம் நமக்கேதடி ஒற்றுமை ஓங்குகையில்
பாலம் அமைத்திடலாம் நாம் பகிர்ந்துண்டு வாழ்ந்திடலாம்
ஆலமரத்தடியே நாம் ஆறிக் களைப்பாறலாம்
சீலமுறவாழ்ந்திடலாம் சீர்செல்வம் சேர்த்திடலாம்
கோல மரிக்கொழுந்தின் குலக்கொடிகாள்
வாருங்கடி
காலமிது கனிந்திருக்கு கண்மணிகள்
வாருங்கடி