சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிவாரம் 203.
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்.

தலைப்பு :
****மார்கழி****

மின்னொளி தீபங்கள் மிளிர்ந்திடும் காலங்கள்
இன்னல் நீக்கிடும் இயேசுவின் பாதங்கள்
மன்னுயிர் நேசங்கள்
மகிழ்விக்கும் பரிசில்கள்
அன்புறும் அகிலங்கள்
அருளிசைக் கீதங்கள்

காரிருள் சூழ்ந்திடினும் கண்களில் ஒளிர்வுகள்
மாரியின் பொழிவுகள்
மண்ணினில் வாசங்கள்
சீரியநற் குடிலினிலே
சித்திரப் பாலனவர்
பூரிப்பில் உயிரினங்கள்
புடைசூழும் பொழுதுகள்

உறையுள் இல்லத்தே
ஒளிரும் மின்மணிகள்
இறையின் இருள் அகல்வில்
இணையும் இதயங்கள்
மறையும் துன்பத்தால்
மலரும் புன்னகைகள்
முறையாய் வருங்காலம்
முழுமதி நிறைவாகும்.

***…….***