சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*********அன்னையர் நாள் *******

உருக்காண உதிரம் ஈந்த
உத்தமி தான் அன்னை
பெரும் துன்பம் பல கண்டு
பெற்றெடுத்தாள் எம்மை

கருவுற்ற நாள் முதலாய்
கண்ணுறக்கம் மறந்தே
அருள் காட்டி அனுதினமும்
அல்லல் நீக்கி காப்பாள்

சருமத்தின் சளைப்பகற்றி
சங்கடங்கள் போக்கி
பெருவிருப்பில் எமை காத்து
பெருமை கொள்ளச் செய்வாள்

வரும்கால வாழ்வுக்கே
வழிகாட்டும் அன்னை
திருஉருவை தொழுதாலே
தினம் பெருகும் இன்பம்