சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* தொழிலாழி *
மழைகாணா மண்ணிற்கு மகிழ்வுண்டோ
அழையாத விழாவிற்கும் அழகுண்டோ
தழைக்காத வாழ்வாலே தயவுண்டோ
உழைக்காத உலகாலே உயர்வுண்டோ

பழிக்காத வாழ்விற்கு தொழிலாளி
வழிதேடி வருகின்றான் தொழில் தேடி
ஒழிக்காமல் ஓயாமல் உழைக்கின்றான்
அழியாமல் காத்திடப்பா முதலாளி

உண்மையாய் உழைக்கும் உத்தமனால்
உலகமும் வாழுதப்பா நித்தமுமாய்
கண்ணாக காத்திடப்பா காலமெல்லாம்
கருமணியும் அவனன்றோ காசினியில்

உருக்கொள்ளும் அவன் உதிரம் உறிஞ்சலாமோ
தெருக்கோடியில் அவனை தொலைக்கவாமோ
வருங்கால வாழ்வின்றி வதைக்கலாமோ
அரும்பொருளாம் அவனையுமே அழிக்கலாமோ