*****சித்திரைத் தாயே வருக****
சித்தம் இனிக்கும் சித்திரைத் தாய் வருக
புத்தம் புதியநற் பூமகளே வருக
நித்தம் உன்வரவை எண்ணி நாளும்நாம்
சுத்தமும் பேணி சுகந்தம் சேர்த்தோமே
நித்திரை ஒழித்து நிறைவாய் விழித்து
சித்த மருந்தினில் சிர நீராடி
புத்தம் புதுஉடை புன்னகை தந்திட
வித்தகி உன்தனை விரும்பி அழைக்க
குத்து விளக்கிடை குடும்பமும் நாட்டி
முத்துக் கோலம் முற்றத்தில் இட்டு
கொத்து மலெரொடு கொன்றையும் கொய்து
அத்தி முகத்தானை அருகினில் வைத்தோம்
பத்தாய் பலதாய் பலகாரம் பரிமாறி
சொத்தான சொந்தத்தில் சேர்ந்திடச் செய்து
வித்தக வாழ்த்துரை விரும்பி விளம்ப
இத்தரை வருவாய் சித்திரைத் தாயே .