சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 202
*நினைவு நாள்*
காவிவந்தோம் காந்தளையே காவியரே வாருங்கள்
நீவி வைப்போம் நெத்திமுடி நித்திலமே வாருங்கள்
ஓவி யத்திற் ஒர்விளக்கை ஏற்றி நின்றோம் வாருங்கள்
ஆவி எல்லாம் ஆடுதன்றோ ஆதவரே
வாருங்கள்
கார்த்திகை திங்களின் கண்மணி காவியர் நீங்களன்றோ
நேர்த்தியின் நேர்மையின் நீதியின் செல்வங்கள் நீங்களன்றோ
கோர்த்தநல் பூச்சரம் கோவிலின் தெய்வங்கள்
நீங்களன்றோ
சேர்புகழ் சோழரின் செங்களச் செம்மல்கள் நீங்களன்றோ
*……….*