திருமதி சிவமணி புவனேஸ்வரன் .சுவிஸ்
சந்தம் சிந்தும் வாரம் 201
தலைப்பு:
***கனவு மெய்ப்பட
வேண்டும்***
இலைமறையாய் இலங்குமந்த ஈழம் தன்னில்
இல்லாமை இல்லாத நிலைமை வேண்டும்
சோலைகளே எங்கெங்கும் செழிக்க வேண்டும்
கோலமயில் அங்காடிக் களிக்க வேண்டும்
மாலைகளில் மான்துள்ளிப் பாய வேண்டும்
மாதரும் மகிழ்வாக வாழ வேண்டும்
சேலைகளைப் பெண்ணுடுத்தி நடக்க வேண்டும்
செந்தமிழில் சொல்லெடுத்துப் பாட வேண்டும்
ஆலைகளும் ஆங்காங்கே அமைக்க வேண்டும்
ஆணினமும் பெண்ணினமும் உழைக்க வேண்டும்
பாலையும் பொழிகின்ற பசுக்கள் வேண்டும்
பால்பருக பசிதாகம் தீர வேண்டும்
சாலையோரம் கதிராடிக் களிக்க வேண்டும்
சாமைநெல்லும் சாகுபடி ஆக வேண்டும்
காலைமணி ஓசையினால் காலம் எல்லாம்
கதிரெழவும் கலைஞானம்
பெருக வேண்டும்.
*———–*