சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் .சுவிசில் இருந்து.
தலைப்பு *தலையீடு*
கட்டிக் கரும்பே கண்ணே மணியே சொல்லும் வார்த்தை சிலகாலம்
தொட்டில் வாழ்வே தொடரும் என்றால்
எட்டும் வாழ்வும் என்னாகும்
சிட்டுக்குருவி சின்னக் குஞ்சுக் இரையைத் தேடும் சிலகாலம்
செட்டை முளைத்தால்
விட்டே பிரிந்து
சேமம் காணும் பலகாலும்
முட்டை கொண்டே முழு மனதாய் திட்டை ஏறும் எறும்பும் தான்
திட்டம் போட்டேதீராப் பசியை தீர்க்க நாளும்
போராடும்
தட்டுத் தடு மாறும் பிள்ளை தவழ்ந்தே நடந்து தலை நிமிரும்
முட்டுக் கட்டை போட்டால் மனிதம்
முயற்சி இன்றி மூழ்கிவிடும்
கட்டுப்பாடு வேண்டாம் காணீர் காலம் எல்லாம்
வீணாகும்
ஒட்டும் வாழ்வில் ஒற்றுமை மட்டும்
ஓங்கி ஒலித்தால் சீராகும்.