சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மணி*
குப்பையிலே மின்னுவதோ
குண்டுமணி
உப்புவளர் கடல் தருமே
முத்துமணி
நெற்கதிரில் மிளிருமந்த நெல்மணி
கற்றிட இணைவாகும்
கண்மணி
கதிர் எழும்முன் எமையெழுப்பும் காண்டாமணி
துதிக்கும்பெண் ஒளிர்விப்பாள் தூண்டாமணி
நங்கையவள் அணிகளிலோ நவமணி
கருக்கவிகள் நமக்களித்தார் கவிமணி
மணிகளதும் மண்ணினிலே பலவிதம்
மகிழ்விக்கும் அதுதானே
அனுதினம்.