சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.

தலைப்பு : *காணி*

கால்பதித்த காணி உன்னை கடந்து வந்து விட்டேன் அன்று

நூல்பதிக்க எண்ணி நானும் நுழைந்து கொண்டு விட்டேன் இன்று

ஓடி விளையாடி நாங்கள்
ஒழித்து விளையாடி
கூடிகுலாவி நின்றே _ நாங்கள் கூடி மகிழ்ந்த காணி
தென்னங் கீற்றின் ஊடே தெரி நிலவொளி தனிலே
பன்னப்பாய் விரித்து வைத்து
பலகதைகள் பேசி
அன்னக்கவளம் உண்டே நாங்கள்
ஆறிக் கிடந்த காணி

முற்றத்தைப் பெருக்கி நன்றாய் முழுதும் சுத்தமாக்கி
அற்றைப் பொழுதில் எங்கள் ஆச்சி வாழ்ந்த காணி
கற்பகத் தருவோ என்தன் கண்ணில் மறையவில்லையடி
நிற்கும் தென்னைகளோ என்தன்
நினைவில் ஒழியவில்லையடி
எப்போ வருவேன் என்று
ஏங்குதடி என் மனது
அப்போ இருப்பாயோ என்று
எழுகுதடி ஐயம் இன்று.