சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*

உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே

ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே

நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே

செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே

கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே

சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே

அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்

பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்

உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்

பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்

தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே