சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*வாழ்த்துப் பா*

தித்திக்கும் செந்தமிழில் தெவிட்டாத சொற்கவிகள்
முத்தாரம் போலாகி முழுமனதும் ஈர்ப்பாகும்
எத்திக்கும் ஒன்றிக்க எழில்கவிகள் ஏற்பாகும்
வித்தகரும் விரிக்கின்ற
விருப்புக்கள் விதையாகும்

நந்தவனப் பாமுகத்தில் நறுமலரில் பாவினங்கள்
சந்தத்தின் சாரீரம் சிந்துகையில் தேனாகும்
அந்தமில் அருங்கவிகள்
ஆண்டாண்டாய் அலர்ந்திடவே
வந்தனங்கள் தந்தேநாம்
வாழ்த்துக்கள் வழங்கிடுவோம்

ஆவையொத்த பால்சுவையில்
அழகுதமிழ் அமுதாக
பாவையவர் பரிவுகளும்
பலகாலும் நிலையாக
தேவையெனத் தானறிந்து
தெரிந்துதந்த அதிபரதும்
சேவையினைப் பாராட்டி
சேவித்து நிற்கின்றோம் .
🙏