சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . -அபிராமி கவிதாசன்.

15.11.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -200

“வாழ்த்துவோம் வாருங்கள் “

பாமுகப் பந்தலே பல்லாண்டு வாழியவே
பூமுகம் மலர்ந்து பொழிவுடன் வாழியவே
சந்தம் சிந்தும் சங்கீதம் வாழியவே
சொந்தம் பந்தம் சுதியுடன் வாழியவே

பாவை சகோதரர் பார்போற்ற வாழியவே
சேவை கவிஞர் சிறப்புற்று வாழியவே
அன்பின் துணைவியார் ஆரோக்கியமாய் வாழியவே
இன்முக இதயங்கள் இணைபிரியா
வாழியவே

அதிபர் சொற்பொழிவு அகல்தீபமாய் வாழியவே
சுதிமீட்கும் வீணைவாணி சகோதரி வாழியவே
செவ்வாய் மலர்கள் தேன்சிந்தி வாழியவே
பௌவிய கவிஞர்கவிப் படைப்பாளர்
வாழியவே

திங்களுக்குள் கவிபடைக்கும் திறமையாளர் வாழியவே
சங்கொலியாய் பாரெங்கும் சந்தமுடன் வாழியவே
இருபது நாற்பதாய் இணைந்த கரம் வாழியவே
இருநூறு பா தொடுத்தோர் இலட்சியமுடன் வாழியவே
வாழிய வாழியவே வான்புகழ் சிறப்புடனே !

நன்றி .
திருமதி .அபிராமி கவிதாசன்🙏