வியாழன் கவிதை

திருமதி .அபிராமி கவிதாசன்

கவிஇலக்கம் -176. 21.07.2022
தலைப்பு !

“ஆடிப்பெருக்கு”
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரியே
கூடிமக்கள் வரவேற்க கோடிபெரும் உழவினிலே
ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து ஆயத்தமே விதைவிதைக்க
நாடிமக்கள் ஆலயத்தில் நான்குபுறமும் தேடிவைக்க
ஆடியிலே தேதிசோல்லி ஆவணியில் வைபோகம்
ஆடிக்கூழும் காச்சி வைச்சி ஆலயத்தில் காத்திருந்து
தேடித்தேடி சொந்தங்களை தேவபாணம் தந்தனரே

அம்மனுக்கு பொங்கலிட்டு ஆத்தாவந்து வாக்குசொல்லி
நம்மஊரு கோயிலிலே நாளுபேரு குலவபோட்டு
மாரியம்மன் மகிமையெல்லாம் மங்கலமாய் பாடச்சொல்லி
வீரியமாய் கும்மிதட்டி வீதிவழி முளைப்பாரி
மங்கையர்கள் மாடத்தினில் மங்களமாய் பூசையிட்டு
ஆடிமாத அம்மனுக்கு ஆனந்தமாய் பாட்டுகட்டி
ஆடிவருகிறாள் வருகிறாள்ஆத்தா பாடிவருகிறாள்

கவிப்பார்வை தட்டிக்கொடுப்பு சோதரிகள்..அதிபர்
சோதரி கலைவாணிமோகன் அவர்களுக்கும்
என் மனமர்ந்த நன்றிகள்🙏🙏🙏