சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.அபிராமி கவிதாசன்.

அறுசீர்விருத்தம்.

“சந்தம் சிந்தும் சந்திப்பு 14.06.202
வாரம் -178 ,

“பாமுகம் அன்பாய் கட்டிய கூடம்”

ஆண்டுகள் இருபத்து ஜந்து
அன்பாய் கட்டிய கூடு
வேண்டி விரும்பிய துறையில்
விதைத்து அறுவடை பயிறு

வாழ்த்து அழைத்து கூறி
வாகை சூட்டி மகிழ்ந்தோம்
வாழ்க்கை எல்லாம் நகைத்து
வாரணம் ஆயிரம் செய்தோம்

அன்னை மொழியை வளர்த்து
அண்ணா அரும்பணி செய்தார்
அண்ணி வாணி மோகன்
அள்ளி அன்பை தெளித்தார் //

சிந்தனை செதுக்கிய சிப்பிகள்
செந்தமிழ் மொழியை பெருக்கினர்
சொந்தப் படைப்பினில் சுகத்துடன்
சொந்தங்கள் நட்பென பூத்தனர் //

ஆளுமை திறன்மிகு அடிப்படை
ஆண்டுகள் கடந்தும் மலர்ந்தன
நாளும் பொழுதும் நற்பணி
நடாமோகன் சகோதரர் பொறுப்பணி//

வரலாற்று அகவை வெள்ளிவிழா
வாழ்த்துகள் கோடி வானொளியே
வரமென யாம்பெற்ற கலைக்கூடம்
வையகம் போற்றிட வாழியவே //

வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு🙏