29.06.2022
சந்தம் சிந்து சந்திப்பு வாரம் 179
கவித்தலைப்பு !
“ பிரிவு துயர்”
பிரியா வரம்வேண்டும்
பெருங்கொடுமை பிரிவுதுயர்
பிரிந்திட இழந்திடும்
பிள்ளைகளின் துடிக்கும்உயிர் //
கண்களுக்குள் வைத்திருந்த
களையாத ஓவியம்
மண்ணுக்குள் மறைந்தன
மனிதஇனக் காவியம் //
நினைந்து நினைந்து
நித்தமும் தேடியும்
வினைமுடிந்து மீண்டெழுந்து
வீடுவரா ஓடின //
உறவாடி மகிழ்ந்தயுள்ளம்
உயிரைத்தேடி ஏங்கின
பிறந்திடவேண்டுஎன்
பிள்ளையென தாங்கிட //
ஓயாது ஒலித்தகுரல்
ஓசையற்று உருகியதே
தீயான ஒளிதீபம்
திரியற்று கருகியதே //
உறவினுள் பகைத்தஉயிர்
உலகினை துறந்திடவே
இறந்த செய்தியின்பின்
இதயம் திறந்தனரே //
உருவமற்ற உலகினிலே
உலாவரும் என்மனமோ
அருவியாகி விழிகளும்
அன்பாலே புண்மனமே //
நன்றி வணக்கம் 🙏