சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . அபிராமி கவிதாசன் .

07.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-209
தலைப்பு !
“ நிச்சயார்த்தம் “

முதிர்கன்னி பெண்ணும் முறைப்படி செல்லவே
முழுமனதாய் பெற்றவர் ஆசியுடன் வாழவே

நதியென ஞானமுடன் நற்பண்பும் நிறைந்தவள்
நல்லதோர் வீணையாய் நாளும் இசைத்தவள்

பதிவரும் நாள்வரை பக்குவமாய் காத்திருந்து
பந்தமிடம்்சொந்தமிடம் பணிவுடன் இணைந்திருந்து

அதிகாலை தரிசனமாய் ஆலயம் வேண்டிட
அன்பும் கருணையும் அவளிடம் உறைந்தன

அதிஸ்ட்ட பெண்ணவள் அன்பறிவு கூடிய
ஆண்மகனை துணையாக்க ஆசிபெற்ற அந்நாளே
நிச்சயார்த்தம் !
நன்றி 🙏
………………………………………………………….……..,…
கவிப்பார்வை தட்டிக்கொடுப்பு
கவித்திறனாய்வு … யாவும் அதிசிறப்பு.
மனம் நிறைந்த பாராடரடுக்கள் 🙏
பாவை அண்ணா🙏🙏🙏🙏