சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் 24.01.2023
சந்திப்பு வாரம்-207
தலைப்பு !
“ யோசி “

சொல்லும் கனியாகும்
செயலாக பேசி
நல்லதை செய்திட
நாளும் யாசி
வெல்வாய்நீ நானிலத்தில்
விவேகத்தை வீசி
நில்லென்றால் காலமும்
நிக்காது யோசி

வெற்றிக்கு தடைக்கல்லாய்
வித்திட்டதைப் பேசி
முற்றிலும் ஒழித்திடும்
முதல்வழியை யோசி

கற்றறிந்த பாடமே
கைதுணையாய் யாசி
தூற்றிடு தோல்வியை
துணிந்துநீ் வீசி

நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா .
தங்கள் தட்டிக்கொடுப்பு கவிப்பார்வை
யாவும் அற்புதம். பாராட்டுக்கள்..நன்றி🙏