10.01.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 205
விருப்புத் தலைப்பு !
“தாயே தமிழ்த்தாயே போற்றி” 🙏🌷
தமிழ்மகனை தரணிக்கு
தந்த தாயே
அமிழ்து மொழியினை
அடுக்கிபேச கற்றுத்தந்தாயே //
முத்தமிழ் பெற்றெடுத்த
முக்கனி சொற்சுவையே
இத்தரணி தமிழ்கமழ
இதயத்தாய் வைத்தாயே//
அல்லும் பகலும்
அயராது தமிழுக்கே
சொல்லாலும் செயலாலும்
சொல்லித் தந்தாயே //
எத்துணை தமிழ்ப்பற்றை
எண்ணிநீர் விதைத்தீரோ
அத்துணை அறுவடையும்
அன்புஇளையோர் இடம்தாயே //
என்னதவம் செய்தீரோ
என்றும்மை பெருமைசெய்யும்
நன்னெறி மகவொன்றை
நற்றமிழுக்காய் ஈன்றதாயே //
புலிபரல் தங்கிச்சென்ற
புன்னிய கற்க்குகையே
வலிமை வித்திட்டு
வழித்தடம் வகுத்தாயே //
நின்புகழ் பாடிட
நித்தமும் பெருமிதமே
என்தாயாய் எண்ணியே
ஏற்றுகிறேன் தீபமே //
நன்றி 🙏🌷🌷🌷🌷
கவிஞர் பாவை …அண்ணா அவர்களின்…..
கவிப்பார்வை , தட்டிக்கொடுப்புக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்🙏