சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . அபிராமி கவிதாசன்.

06.12.2022
சந்தம்சிந்தும் சந்திப்புக்காக…
சந்தம் சிந்தும் வாரம் -203,

மார்கழி
மார்கழித் திங்கள் மாலை அணிந்து
பாரெங்கும் பக்தர் பாதம் பணிந்து
பெயரெல்லாம் சாமிகளே பெயர்நாமம் இட்டு
ஊரெங்கும் கூடிடுவர் உறவாகக் கூட்டம்

ஜயப்பன் கோசமிட்டு ஜயனின் ஆசிபெற்று
தூய பக்தராய் தொண்டாற்றும் போற்றி
ஆலயம் தொழுதிடும் ஆண்டவன் தரிசனம்
சாலவும் சிறந்ததாம் சன்னதி சங்கீதம்

பனிப் பந்தல் படர்ந்திருக்கும்
பால்நிலா பூத்திருக்கும்கனிசுவை சங்கீதம்
காதினில் ஒலித்தருக்கும்
கார்த்திகை மார்கழி காத்திருந்து மாலை

நேத்திக்கடன் செழுத்திட நோன்பு இருந்த வேளை
வானளவு துன்பத்தையும்
வாளெடுத்து அறுப்பார்
கானகத்து ராஜனவர்
கன்னிசாமியை அழைப்பார்

மிக்க நன்றி .கவிஞர் பாவை ்அண்ணா
அவர்களே 🙏🙏🙏