சந்தம் சிந்தும் கவிதை

திருமதி . அபிராமி கவிதாசன்.

22.11.2022
சந்தம் சிந்தும் வாரம் -201
திருமதி.அபிராமி கவிதாசன்.

“ கனவு மெய்ப்பட “
கனவு மெய்ப்பட
காலமும் போராட்டம்
மனதில் உறுதியுடன்
மன்றினில் தேரோட்டம்
தினமும் உள்ளத்
திரையில் நினைவோட்டம்
நனவாகும் அந்த
நாளோ கொண்டாட்டம்

துணிவே துணையாய்
துன்பம் களைத்து
பணிந்து சபையில்
பண்பாய் நிலைத்து
பணியே கண்ணாய்
பகல்அல்லும் உழைத்து
அணிவேன் கனவை
அச்சம் தவிர்த்து

இலட்சிய கோட்டையை இலகுவாய் அடைய
அலட்சிய போக்கை அறிவால் உடைத்து
நிலவின் பிறையாய் நிதானம் அடைந்து
உலக வாழ்வில் உயிர்வரை விடைகொடு

ஆண்டு நூறு ஆயுளோ அற்பம்
வேண்டும் வரமும் விரைவில் கிட்டிட
ஆண்டவன் சாட்சி அள்ளித்தந்த பூமயில்
மாண்டோர் கனவும் மாண்புடன் மெய்ப்படும்..!

நன்றி பாவை அண்ணா 🙏