சந்தம் சிந்தும் கவிதை

திருமதி .அபிராமி கவிதாசன்.

20.09.2022

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -192
தலைப்பு !
“மாட்சிமை மிக்க மகாராணி”

மாட்சிமை மிக்க மகாராணி மங்கை
ஆட்சியின் ராட்சியம் ஆகாயம் விஞ்சும்
பெயரில்இல்லை ராணி
பெரும்பண்பில் கண்டோம்
உயர்வில்இல்லை ராணி
உலகநட்பில் கண்டோம் //

முகத்தில்இல்லை முகவரிஎழுத்து
அகத்தின் அதிசயம்
அழகில் கண்டோம் //

தோப்பின் உறவில்
தொட்டில் குழந்தை
மூப்பினை எய்திய
மூத்தக் குழந்தை //

அகவை தொன்ணூற்று
ஐந்து ஆகியும்
மகவாய் மருமகள்
மடியில் குழந்தையே //

அடுத்த வாரிசின்
ஐயம் களைந்ததே
கொடுத்தார் வாக்கும்
குலமகள் மருமகளே//

பிறப்பிலில்லை மனிதப்
பிறவியின் பயனும்
இறப்பனில் அறிவர்
இப்பிறவி பயனை //

மிக்க நன்றி பாவை அண்ணா 🙏