23.08.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 185,
தலைப்பு !
“கோடை விடுமுறையும் நீச்சல் குளமும்”
நீச்சல் குளமுடனே நித்தம்
நிலாப்பெண் உலாவி ஊர்வலம்
மின்னலாய் புன்னகை சிந்தி
மிளிர்ந்தன அகமும் முகமும் //
நட்சத்திரக் கூட்டங்களாய் நட்பு வட்டம்
நடமாடி மகிழ்ந்திடும் கோடைவிழா
வானமகள் நீலவண்ண தோரணமாய்
வண்ணம் தந்தால் குளத்தினிலே //
அருகருகே தோழியரை அணைத்தபடி
அன்புமழை பொழிந்திட்ட மேகக்கூட்டம்
வெள்ளிநிலா நீரினிலே மிதந்தபடி
வெள்ளை நகைப்பினிலே மகிழ்ந்தபடி //
நித்தம் நித்தம் புதுவரவை
நெஞ்சமெங்கும் தஞ்சம் கொண்டேன்
திங்கள் ஒன்று மகிழ்வுகொண்டு
தினங்கள் சென்றன மிகநன்றென //